ஸ்தோத்திர பலிகளை செலுத்துவோம்
ஆத்துமாவின் நேசரை புகழ்த்துவோம்
புனிதமாய் புனிதமாய்
கனிவுடன் கரமுயர்த்திக்
கர்த்தனை உயர்த்துவோம்
1. உதட்டின் காளை உன்னதர்க்களிக்கிறோம்
உத்தம இருதயம் படைக்கிறோம்
முற்றுமே முற்றுமே
குற்றமற்றதாக்க எம்மை
சுத்தமாக வைக்கிறோம்
2. பங்கமின்றி தாசரெம்மை காத்ததால்
துங்கனேசு தூய்மை நமக்கீந்ததால்
மகிமையே மகிமையே
நீங்கிடாதிருந்து நம்மை
தீங்கினின்று மீட்டதால்
3. பரிசுத்தம் செய்யும் பலி ஆயினார்
தரிசிக்க தம்மை வழிகாட்டினார்
கனிவுடன் கனிவுடன் பாரிசத்திருந்
தெமக்காய் பரிந்து பேசுகின்றார்
4. சீயோனில் துதிகளை திரட்டுவோம்
தீயோனின் மதில்களை புரட்டுவோம்
தீரமுடன் தீரமுடன் லேகியோன் படைகளை
எதிரித்துநின்று வாட்டுவோம்
5. ஓய்வில்லாத ஸ்தோத்திரங்கள் சாற்றியே
பொய் பிசாசின் அஸ்திரங்கள் அழித்துமே
தூயனை தூயனை தூய்மையுடன் போற்றி
சுவிசேஷமதை சாற்றுவோம்